Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லலித் – அனுஷ ஆகிய இருவரும் மஹிந்த கூறியே மோசடியில் ஈடுபட்டனர்: சமரசிங்க

In இலங்கை
Published: 14:18 GMT, Sep 8, 2017 |
0 Comments
1139
This post was written by : Anojkiyan
mahj

லலித்வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்ட ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பின்பேரிலேயே மோசடியில் ஈடுபட்டதாக ஊழல் ஒழிப்புக்குழுவின் இணைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மருதானை சன சமூக நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“புதிய விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிப்பதன் ஊடாகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை குற்றவாளிக்கூண்டில் ஏற்ற முடியும் என ஊழல் ஒழிப்பு குழு தெரிவித்துள்ளது. கடந்த கால ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் அடையாளம் காட்டுதவற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உச்சபட்ச அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் நாம் 87 முறைப்பாடுகளுக்கும் மேல் இலஞ்ச ஊழல் திணைக்களத்திற்கு முறைப்பாடுகளை முன்வைத்திருந்தோம். அவற்றில் சில் துணி விநியோகம் மோசடி குறித்தும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை தெரிவித்திருந்தோம். அதற்கமைவாக தற்போது இந்த வழக்கிற்கான நீதி கிடைத்துள்ளது.

ஆகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விசாரணை செய்வதற்கு விசேட ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க வேண்டும். இதற்கு தற்போதைய நல்லாட்சியின் தலைவர்கள் உடன்படுவார்களா என்பது கேள்விக்குறியாகும்” என கூறினார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவிற்கு சொந்தமான 600 மில்லியன் ரூபாவை பயன்படுத்தி நாடளாவிய ரீதியில் விகாரைகளுக்கு துணிகள் விநியோகித்தமை தொடர்பில் குறித்த இருவருக்கும் மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்திருந்தது.

இதன்படி இவர்களுக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் தலா ஒன்றரை வருட சிறைத்தண்டனை வீதம் இருவருக்கும் தலா மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனையை மேல் நீதிமன்ற நீதிபதி திஹான் குலதுங்க அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg