Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பேபிகோர்ன் கிரேவி

In
Published: 15:04 GMT, Sep 8, 2017 |
0 Comments
1102
icon_com
This post was written by : Anojkiyan
baby-corn-chilli

தேவையான பொருட்கள்

பேபிகோர்ன் – கால் கிலோ
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் – தேவைக்கேற்ப
இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
கடலை மாவு, அரிசி மாவு – தலா ஒரு டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – ஒன்று
பெரிய தக்காளி – ஒன்று
பச்சை மிளகாய் – 2
மிளகாய்த்தூள், கரம்மசலாத்தூள் – தேவைக்கேற்ப
தனியாத்தூள் – ஒன்றரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
சோம்பு – ஒரு டீஸ்பூன்
செட்டிநாடு பவுடர் – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்த மல்லி – சிறிதளவு
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, கழுவிய பேபிகோர்னை போட்டு 2 நிமிடம் வரை வைத்து பின் தண்ணீரை வடிகட்டி எடுத்து கோர்னை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். ஒரு தட்டில் குறிப்பிட்ட அளவு மிளகாய்த்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள்தூள், இஞ்சி – பூண்டு விழுது சிறிதளவு சேர்த்து, இதில் நறுக்கிய பேபி கோர்னை சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசிறி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

பேபி கோர்னை வறுப்பதற்கு முன் கடலை மாவும், அரிசி மாவும் தூவி பிசிறி, நன்கு காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித் தெடுத்து தனியே வைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு சேர்த்து பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் மீதம் இருக்கும் இஞ்சி – பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அடுத்து அதில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், செட்டிநாடு பவுடர், நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு இதனுடன் வறுத்த கோர்னை சேர்த்து சிறிது நேரம் வதக்கி… இறக்கும்போது கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கி பரிமாறவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg