Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரே பார்வையில் இன்றைய உலகச் செய்திகள்

In
Updated: 16:02 GMT, Sep 8, 2017 | Published: 16:02 GMT, Sep 8, 2017 |
0 Comments
1522
icon_com
This post was written by : Sivaguru Siva
_97718583_familyreu

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் மியான்மாரின் ரங்கீன் பிரதேசத்தில் இருந்து  சுமார் இரண்டு லட்சத்து எழுபதினாயிரம் ரோஹிஞ்சா ஏதிலிகள்  பங்களாதேசுக்கு சென்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

பங்களாதேசில் ரோஹிஞ்சா ஏதிலிகள்  குவியும் நிலையில் அங்கு மனிதாபிமான நெருக்கடிகள் தோன்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஐ.நா ரோஹிஞ்சா மக்கள் மீதான வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர அவசரமாக நடவடிக்கைகள் தேவையெனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

pri_51869437-e1504796351761

அத்திலாந்திக் சமுத்திரப்பிராந்திய நாடுகளை கடுமையாக தாக்கிவரும் இர்மா புயல் எதிர்வரும் ஞாயிறன்று அமெரிக்காவின் புளோரிடா பகுதியைத் தாக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் இர்மா புயல் அமெரிக்காவின் ஒரு பகுதியை நாசம் செய்யும் அமெரிக்காவின் அவசரகால முகமை அமைப்பின் (பெமா) தலைவர் இன்று எச்சரிக்கை செய்துள்ளார்.

இர்மா தனது அதியுச்ச ஐந்தாம் நிலைத்தீவிரத்தைச்சற்று இழந்து நான்காம் நிலைத்தீவிரத்துக்கு மாறினாலும் அது அமெரி;க்காவில் பேரழிவை ஏற்படுத்தும் எனவே எச்சரிக்கப்பட்டுள்ளது.

இர்மா புயலின் தாக்கத்தால் புளோரிடா பிராந்தியத்துக்கு சில நாட்களுக்கு மின்சாரம் தடைப்படுமென எச்சரித்துள்ள அவர் சுமார் ஒரு லட்சம் மக்களுக்கு தற்காலிகவதிவிடங்கள் தேவைப்படுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே எர்மாவின் தாக்குதலுக்கு உள்ளாகிய கரீபியத்தீவுகளில் ஒன்றான  செனற்.மார்டினில் தற்போது பெரும் கொள்ளைச்சம்பவங்கள் இடம்பெற்றுவருவதாக அறிவிக்கப்படுகிறது.

NEET test

தமிழகத்தில் நீட்தேர்வுக்கு எதிரான போராட்டங்களை அனுமதிக்கக் கூடாதென இந்திய உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வு குறித்து உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் அதற்க்கு எதிராக போராட்டம் நடத்துவது நீதிமன்றத் தீர்ப்பை அவமதிப்பதென்பதால்

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுவோர்கள் மீது தமிழக அரசு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது

_97715675_mapfour

மெக்ஸிக்கோவை இந்த நூற்றாண்டின் பலம்வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஏற்பட்ட அழிவுகளின் விபரங்கள் வெளிப்பட்டுவருகின்றன. இதுவரை இந்த நிலநடுக்கத்தில் 33 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது

றிக்டர் அளவில் 8.2 ஆக பதிவுசெய்யப்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வை 50 மில்லியன் மெக்சிக்கர்கள் உணர்ந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலநடுக்கத்தின்; பாதிப்பு ஒவாசாக்கா மற்றும் சியாப்பா பிராந்தியங்களில் அதிகமாக உள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது

170907084916-01-golf-wildfire-trnd-exlarge-169

கொழுந்து விட்டெரியும் காட்டுத் தீ மள மள எனப் பரவினாலும் தாம் ஆர்வமுடன் விளையாடிய கோல்ப் விளையாட்டை இடை நிறுத்திவிட்டு தப்பியோடுவதற்கு இவர்களுக்கு மனமில்லையாம்

இதனால் மள மள எனப்பரவிவரும் காட்டுத்தீயின் பின்ன்ணியில் இவர்கள் கூலாக  கோல்ப் விளையாடும் காட்சி தெரிகிறது.

அமெரிக்காவின் வோசிங்டன் மாநிலத்தில் கொலம்பியா ஆற்றுக்கு அருகே ஏற்பட்ட பாரிய காட்டுத்தீ பரவலின் போது நேற்று முன்தினம் இந்த நிழற்படம் எடுக்கப்பட்டது.

காட்டுத்தீயிலிருந்து தப்பியோட முனையாமல்  அட இப்படி விளையட்டுப்பிள்ளைகளாக இருக்கலாமா?  எனக்கேட்டால் நெருப்பு இன்னமும் கிட்டவரவி;ல்லைத்தானே என்றார்களாம் கூலாக.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg