Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மியன்மாரில் நிலையான தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் – ஈரான்

In உலகம்
Updated: 04:01 GMT, Sep 9, 2017 | Published: 04:01 GMT, Sep 9, 2017 |
0 Comments
1336
This post was written by : Suganthini

மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக ஏற்பட்டுள்ள வன்முறையை முடிவுக்குக் கொண்டுவந்து, நிலையான தீர்வைக் காண்பதற்கான நடவடிக்கையை விரைவில் எடுக்குமாறு, ஈரான் வெளிவிவகார அமைச்சர் மொஹம்மட் ஜவாட் ஸரிப் கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச சமூகத்திடமும் ஐக்கிய நாடுகள் சபையிடமுமே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து இடம்பெற்றுவரும் வன்முறைக்குச் சம்பவத்துக்கு அவர் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டெரஸுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) அவர் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவதாவது, ‘மியன்மாரில் மோசமடைந்துவரும் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக ஐக்கிய நாடுகள் நபை நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

இந்நிலையில், அங்கு வன்முறை முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதுடன், மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்துடன், மியன்மாரில் ஏற்பட்டுள்ள வன்முறைக்கு நிலையான தீர்வு காணப்பட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியன்மாரின் ராஹினி மாநிலத்தில் கடந்த ஓகஸ்ட் 25ஆம் திகதி புதிதாக வன்முறை வெடித்துள்ளதைத் தொடர்ந்து, பெருமளவான ரோஹிங்கியா முஸ்லிம்கள் பங்களாதேஷில் தஞ்சம் கோரி வருகின்றனர்.

இதுவரையில் ஒரு இலட்சத்து 64 ஆயிரம் பேர், பங்களாதேஷில் அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான முகவரகம் கடந்த வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இவ்வாறு இடம்பெயர்ந்துவரும் அகதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என ஐ.நா. அகதிகளுக்கான முகவரகத்தின் பேச்சாளர் விவியன் டான் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg