Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தலவாக்கலை மற்றும் காத்தான்குடி ஆகிய பகுதிகளில் விபத்து ஐவர் காயம்

In இலங்கை
Published: 04:03 GMT, Sep 9, 2017 |
0 Comments
1320
icon_com
This post was written by : Arul Jesu

ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின், சென்கிளயார் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு சுமார் 10.00 மணியளவில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி 80 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் முச்சக்கர வண்டியில் பயணம் செய்த மூன்று பேர் கடும்காயங்களுக்குள்ளாகி கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த மூவரில் ஒருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும், ஏனைய இருவரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருதாகவும் வைத்தியசாலையின் உத்தியோகஸத்தர் ஒருவர் தெரிவித்தார்.

வட்டவளை பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை புதிய காத்தான்குடி- 06, கர்பலா வீதியில் முச்சக்கர வண்டி ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பேரும் காயமடைந்த நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (சனிக்கிழமை) காலை 8.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

DSC09051 DSC09052 DSC09054 DSC09059 DSC09075 IMG_20170909_083501-1024x1365 IMG-20170909-WA0004

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg