Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சர்வதேச பரா ஒலிம்பிக் சபைத் தலைவராக அன்ரூ பார்சன்ஸ் தெரிவு

In விளையாட்டு
Published: 07:34 GMT, Sep 9, 2017 |
0 Comments
1165
icon_com
This post was written by : Elakkiya

சர்வதேச பரா ஒலிம்பிக் சபையின் தலைவராக பிறேசிலைச் சேர்ந்த அன்ரூ பார்சன்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அபுதாபியில் நேற்று (வெள்ளிக்கிமை) நடைபெற்ற சர்வதேச பரா ஒலிம்பிக் சபை பொதுக்குழு கூட்டத்தில் முதல்சுற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 162 உறுப்பினர்களை கொண்ட சபையில் பெரும்பான்மையாக 84 வாக்குகளை பெற்று அன்ரூ பார்சன்ஸ் அமைப்பின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்ய பரா ஒலிம்பிக் சபைக்கு தொடர்ச்சியாக தடை விதிக்கப்பட்டுள்ளமை உட்பட பல பிரச்சினைகள் தொடர்பில் அன்ரூ பார்சனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த பார்சன்ஸ், சர்வதேச பரா ஒலிம்பிக் குடும்பத்திற்குள் ரஷ்ய வீரர்கள் மீண்டும் வரவேண்டும் என்றே தான் விரும்புவதாகவும் அதற்கு மேலும் பல நடவடிக்கைகயை பின்பற்ற வேண்டி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg