Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கௌரி லங்கேஷ் படுகொலை – கர்நாடக அரசு அறிக்கை சமர்ப்பிப்பு!

In இந்தியா
Updated: 07:52 GMT, Sep 9, 2017 | Published: 07:45 GMT, Sep 9, 2017 |
0 Comments
1226
This post was written by : Vithushagan

மூத்த பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை குறித்த அறிக்கையை கர்நாடக அரசு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு இன்று(சனிக்கிழமை) அனுப்பி வைத்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்த மூத்த பெண் பத்திரிக்கையாளரான 55 வயதுடைய கௌரி லங்கேஷ் கடந்த 5ஆம் திகதி மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.

அவரது கொலை குறித்த அறிக்கையை விரைவில் சமர்பிக்குமாறு கர்நாடக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், கௌரி லங்கேஷ் கொலை குறித்த அறிக்கையை கர்நாடக அரசு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு இன்று அனுப்பி வைத்துள்ளது.

கர்நாடக மாநில தலைமை செயலாளர் அனுப்பிய இந்த அறிக்கையில் கௌரி  கொலை குறித்த விவரங்கள் மற்றும் பொலிஸாரால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போன்ற அனைத்து தகவல்களும் அடங்கியுள்ளதாக என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கௌரி கொலை வழக்கை விசாரிக்க மாநில அரசு சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg