Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்- இறுதிப்போட்டியில் மோதும் நடால், ஆன்டர்ஸன்

In டெனிஸ்
Updated: 08:16 GMT, Sep 9, 2017 | Published: 08:15 GMT, Sep 9, 2017 |
0 Comments
1110
icon_com
This post was written by : Elakkiya
Nadal of Spain shakes hands with Anderson of South Africa after winning their men's singles match at the Australian Open 2015 tennis tournament in Melbourne

நியூயோர்க்கில் நடைபெறும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் ஸ்பெய்ன் வீரர் ரபேல் நடாலும் தென் ஆபிரிக்க வீரர் கெவின் ஆன்டர்ஸனும் மோதவுள்ளனர்.

இலங்கை நேரப்படி எதிர்வரும் 11 ஆம் திகதி அதிகாலை 1.30 க்கு இந்த போட்டி நடைபெறவுள்ளது.

உலகின் முதல்நிலை வீரரான ரபேல் நடால் 23 ஆவது முறையாக கிறான்ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார். இவற்றுள் நான்காவது முறையாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார்.

இவ்வாண்டு நடைபெற்ற பிரான்ஸ் ஓபன் டென்னிஸ் பட்டத்தையும் நடாலே வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை தென் ஆபிரிக்க வீரர் கெவின் ஆன்டர்ஸன் முதன்முறையாக கிறான்ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg