Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்க ஓபன் டென்னிஸ் சம்பியன் பட்டத்திற்காக மோதும் அமெரிக்கர்கள்

In டெனிஸ்
Updated: 08:32 GMT, Sep 9, 2017 | Published: 08:31 GMT, Sep 9, 2017 |
0 Comments
1171
icon_com
This post was written by : Elakkiya
201709090847415417_US-Open-Madison-Keys-and-Sloane-Stephens-clash-in-final_SECVPF

கிறான்ஸ்லாம் அந்தஸ்துடைய அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் அமரிக்க வீராங்கனைகள் இருவர் மோதவுள்ளனர்.

அரையிறுதிப் போட்டியில் அனுபவம் வாய்ந்த வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸூக்கு அதிர்த்திச் தோல்வியளித்த ஸ்லோன் ஸ்டீபன்ஸ் மற்றும் மேடிசன் கீஸ் ஆகியோரே இறுதிப் போட்டியில் மோதவுள்ளனர்.  இலங்கை நேரப்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1.30 க்கு இந்த போட்டி நடைபெறவுள்ளது.

இடதுகாலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 11 மாதங்களாக ஓய்விலிருந்த 24 வயதான ஸ்டீபன்ஸ்,  ஜூலை மாதமே டென்னிஸ் களத்தில் இறங்கினார். அதன்பின்னர் தொடர்ச்சியாக எழுச்சிபெற்றுவரும் ஸ்டீபன்ஸ் இம்முறை அமெரிக்க ஓபனில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று பிரமிக்க வைத்துள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் தரவரிசையில் 22 ஆவது இடத்தை பிடித்துள்ள அவர் சம்பியன் பட்டத்தை வெல்லும் பட்சத்தில் 15  ஆவது இடத்திற்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதேவேளை மேடிசன் கீஸ் பட்டம் வென்றால் தரவரிசையில் 9 ஆவது இடத்தை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது.

இதுஇவ்வாறிருக்க, மேடிசன் கீசும், ஸ்டீபன்ஸூம் இதற்கு முன்னரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் நான்காவது சுற்றை கடந்தததில்லை என்பது முக்கிய விடயமாகின்றது. அதுமட்டுமல்ல 2002 ஆம் ஆண்டுக்கு பின்னர் அமெரிக்க ஓபன் இறுதி ஆட்டத்தில் இரு அமெரிக்கர்கள் மோதுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg