Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிரீஸில் முதலீடுகளை செய்ய வருமாறு வர்த்தகர்களுக்கு அழைப்பு

In ஐரோப்பா
Updated: 08:24 GMT, Sep 9, 2017 | Published: 08:24 GMT, Sep 9, 2017 |
0 Comments
1315
This post was written by : Suganthini

கிரீஸில் முதலீடுகளைச் செய்வதற்கு முன்வருமாறு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வர்த்தகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கிரீஸ் தலைநகரான ஏதென்ஸுக்கு, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் சென்றுள்ளார்.  இந்நிலையில், கிரீக் பிரதமர் அலெக்ஸ் சிப்ரஸுடனும் அவர் கலந்துரையாடியுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலை அடுத்து, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வர்த்தகர்களிடம் பிரான்ஸ் ஜனாதிபதியும் கிரீஸ் பிரதமரும் இணைந்து நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த அழைப்பை விடுத்துள்ளனர்.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனுடன் பிரான்ஸ் வர்த்தகத் தலைவர்கள் இணைந்து செயற்பட முன்வருகின்றமையானது, கிரீஸுக்கு சிறந்ததொரு வாய்ப்பு எனவும் கிரீக் பிரதமர் கூறியுள்ளார்.

தமது நாட்டில் வர்த்தகர்கள் முதலீடுகளைச் செய்வதற்கு தமது அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் 2018ஆம் ஆண்டுக்குள் தமது நாட்டில் சிறந்த நிதிக் கட்டமைப்பு பேணப்படும் என்பதுடன், வேலைவாய்ப்பு இன்றியுள்ளவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதும் தமது இலக்கு எனவும் அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg