Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

‘நிலமெஹெவர’ நடமாடும் சேவை மன்னாரில்

In இலங்கை
Published: 09:20 GMT, Sep 9, 2017 |
0 Comments
1226
icon_com
This post was written by : Arul Jesu

‘நிலமெஹெவர’ ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் நடமாடும் சேவை இன்று (சனிக்கிழமை) மன்னாரில் நடைபெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் மன்னார் பிரதேசச் செயலகம் ஆகியவை இணைந்து மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையில் குறித்த நடமாடும் சேவையை நடத்தினர்.

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயனடையும் வகையில் இந்த நடமாடும் சேவை இடம் பெற்றது.

இதன் போது பிறப்புச் சான்றுதல், தேசிய அடையாள அட்டை, ஓய்வூதியம், சம்பளப் பிணக்குகள், சாரதி அனுமதிப் பத்திரம், மூக்குக்கண்ணாடி, ஆலோசனைச் சேவை, காணிப்பிணக்குகள், முதியோர் அடையாள அட்டை, உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஸாட் பதியுதீன், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு காணி உறுதிகள்,சுய தொழில் உதவித்திட்டங்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நடமாடும் சேவை நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை நானாட்டான் பிரதேசத்தில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

DSC_0002 DSC_0039 DSC_0054 DSC_0057 DSC_0062 DSC_0072 DSC_0087 DSC_0145

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)