Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எதென்ஸ் மக்கள் கூட்டத்தில் சிக்கிக்கொண்ட பிரான்ஸ் ஜனாதிபதி!

In ஐரோப்பா
Published: 11:39 GMT, Sep 9, 2017 |
0 Comments
1172
icon_com
This post was written by : Suganthini
france

கிரீஸுக்கு விஜயம் செய்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் மற்றும் அவரது பாரியார் பிரிஜ்டிட்டும் ஏதென்ஸ் நகரிலுள்ள பிரதான கடைத் தெருவில் நேற்று (வெள்ளிக்கிழமை) சுற்றுலா வந்துள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் இருவரும் மக்கள் கூட்டத்தில் அகப்பட்டுக் கொண்டுள்ளனர். இதன்போது, பொதுமக்களுக்குக் கைலாகு கொடுத்து கலந்துரையாடியுள்ளதுடன், அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்துள்ளனர்.

அத்துடன், அவர்கள் இருவரும் கடை உரிமையாளர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினர்.

பிரான்ஸ் ஜனாதிபதியும் அவரது பாரியாரும் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை ஏதென்ஸுக்கு மேற்கொண்டுள்ள நிலையில், மாநாடொன்றிலும் கலந்துகொண்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg