Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறுபான்மையினருக்கு விரைவில் விடிவு ஏற்படும்: கிழக்கு முதல்வர்

In இலங்கை
Updated: 11:54 GMT, Sep 9, 2017 | Published: 11:54 GMT, Sep 9, 2017 |
0 Comments
1192
This post was written by : Vithushagan

சிறுபான்மையினருக்கு விடிவினை ஏற்படுத்தும் வகையிலான அரசியல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்படும் என  கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் நகரில் பாதைகள் திறப்பு விழா மற்றும் பாலங்களுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வின் பின்னர் இடம் பெற்ற பொதுக் கூட்டத்திலேயே கிழக்கு முதலமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட  முதலமைச்சர், ”கடந்த ஆட்சியாளர்களால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைக்கப்பட்டு இந்த நல்லாட்சியின் கைகளில் கடன் சுமைகளுடன் வழங்கப்பட்டு இருந்தன,இதனால் கடந்த இரண்டு வருடக் காலப்பகுதியில் நல்லாட்சியில் பாரிய அபிவிருத்திகள் ஏதும் இடம்பெறாத நிலையில் அண்மையில் 2025 எனும் புதிய பொருளாதார திட்டத்​தை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் முன்வைத்தனர்.

இனிமேல் அந்த திட்டத்தின் அடிப்படையில் நாட்டின் வளர்ச்சிக்காக அந்த பொருாளதார திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றமையால் அதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கின்றது.

அத்துடன் அனைத்து மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துவதாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தேர்தல் காலங்களில் கூறினர், அதற்காக மக்கள் வழங்கிய ஆணையை நிறைவேற்ற வேண்டிய தேவை இருக்கின்றது.

அத்துடன் சிறுபான்மையினருக்கு விடிவினை ஏற்படுத்தும் வகையிலான அரசியல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்படும் முஸ்தீபுகள் உள்ளன.

இந்தக் கால கட்டத்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டால் குறித்த திட்டங்களுக்கு பாதகம் வரலாம் எனக் கருதி 20ஆம் திருத்தத்தை அரசாங்கம் முன்வைத்துள்ளது.

நாட்டு மக்களுக்கும் சிறுபான்மையினருக்கும் நன்மையை ஏற்படுத்தும் எந்த விடயத்திற்கும் கிழக்கு மாகாண எப்போதும் ஒத்துழைப்பு வழங்கும்.

ஆகவே மாகாண சபையின’ அதிகாரங்களை பறிக்கும் வகையிலான ஷரத்துக்களை திருத்தத்தை ஏற்படுத்தி அரசாங்கம் மாகாண சபைக்கு வழங்கினால் எதிர்வரும் திங்கட்கிழமை எமது மாகாண சபை கூடவுள்ளது இதன் போது நாம் அதனை சாதகமாக பரிசீலிப்போம்” என முதல்வர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg