Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பாடசாலை மாணவர்கள் சென்ற பேரூந்து விபத்து: 13 பேர் காயம்

In இலங்கை
Published: 13:28 GMT, Sep 9, 2017 |
0 Comments
1182
icon_com
This post was written by : Ravivarman
Accident

தம்புள்ள – குருணாகல பிரதான வீதியிலுள்ள மல்சிறிபுர கொஸ்கல்ல பிரதேசத்தில் இரண்டு பேரூந்துகள் மற்றும் வான் என்பன ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்து கொகரல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (சனிக்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் காயமடைந்தவர்களுள் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் மூவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் காயமடைந்தவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

கெகிராவயிலிருந்து கொழும்பு நோக்கி சுற்றுலா சென்று கொண்டிருந்த பாலர் பாடசாலை மாணவர்கள் சென்ற பேரூந்து ஒன்றும், கந்தளாயிலிருந்து நோயாளர் ஒருவரை கொழும்புக்கு ஏற்றிச் சென்று கொண்டிருந்த வான் ஒன்றும், கொழும்பு – பொலன்னறுவை நோக்கி பயணித்த பயணிகள் பேரூந்து ஒன்றுமே இவ்வாறு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இது குறித்த மேலதிக விசாரணைகளை கொகரல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg