Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மல்வத்து பீட மகாநாயக்கருடன் வடக்கு முதலமைச்சர் சந்திப்பு!

In இலங்கை
Published: 14:08 GMT, Sep 9, 2017 |
0 Comments
1232
icon_com
This post was written by : Ravivarman
malwatha_ma

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உட்பட வட மாகாண அமைச்சர்கள் இன்று (சனிக்கிழமை) மல்வத்து பீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

வடக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து இதன்போது வடக்கு அமைச்சர்கள் மகாநாயக்கருக்கு விளக்கமளித்துள்ளனர்.

மேலும் இச்சந்திப்பில் வடக்கிலுள்ள 89000 பெண்கள் விதவைகளாகவுள்ளதாகவும், அதேபோன்று அனாதைக் குழந்தைகளும் அதிகமானோர் காணப்படுவதாகவும் அவர்கள் எடுத்துக் கூறியுள்ளனர்.

இதேவேளை அஸ்கிரிய பீட மகாநாயகர் வடக்குக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததாகவும், அதேபோன்று மல்வத்து பீட மகாநாயக்கராகிய தாங்களும் விஜயம் செய்ய வேண்டும் எனவும் இதன்போது வடக்கு அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg