Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சத்துருக்கொண்டான் நினைவேந்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு புறக்கணிப்பு!

In இலங்கை
Published: 16:22 GMT, Sep 9, 2017 |
0 Comments
1361
icon_com
This post was written by : Ravivarman

சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தலில் கலந்து கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை மக்கள் குறித்த நிகழ்வில் கலந்து கொள்ளவிடாது தடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் 1990ம் ஆண்டு 186 தமிழ் மக்கள் இனப்படுகொலையின் 27 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சத்துருக்கொண்டான் சந்தியில் உள்ள நினைவுத் தூபியில் இன்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்றது.

படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளுக்கு இதுவரை நீதி பெற்றத்தரவில்லை எனவே இதில் அரசியல் செய்யக் கூடாது என தெரிவித்து அவர்களை அங்கு உரையாற்றவோ தீபச்சுடர் ஏற்றக் கூட மக்கள் அனுமதியக்கவில்லை.

இந்த நிகழ்வில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வியாழேந்திரன், சீ. யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபை விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம், பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கோ.கருணாகரன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் ஆகியோர் கலந்து கொள்ளச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SAM_8951 - Copy SAM_8950 - Copy SAM_8943 - Copy SAM_8950

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg