Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

களத்தை வசப்படுத்தி பட்டத்தையும் கைப்பற்றிய இளம் புயல்!

In டெனிஸ்
Published: 05:30 GMT, Sep 10, 2017 |
0 Comments
1260
icon_com
This post was written by : Puvanes
tennies001

கிறான்ஸ்லாம் அந்தஸ்துடைய அமெரிக்க ஓபன் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் வெற்றி பெற்றுள்ளார்.

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடர் ஓய்வுக்கு பின்னர் கடந்த யூலை மாதம் 24 வயதான ஸ்லோன் மீண்டும் களம் இறங்கியதால் அவருக்கு பலத்த எதிர்பார்ப்பு காணப்பட்டது.

பரபரப்பாக ஆரம்பமான இறுதிப்போட்டியில் ஸ்லோன் மற்றும் அமெரிக்க வீராங்கணை மேடிசன் கீஸ் ஆகிய இருவரும் பலப்பரீட்சை நடத்தினர். ஒரே நாட்டைச் சேர்ந்த இருவரும் மோதிக் கொண்டதால் குறித்த போட்டிக்கு பலத்த வரவேற்பு காணப்பட்டது.

ஆரம்பம் முதலாகவே அதிரடி காட்டிய ஸ்லோன் முதல் சுற்றை 6-3, என்று கைப்பற்றியதோடு, இரண்டாம் சுற்றை 6-0, என்ற கணக்கில் கைப்பற்றி சம்பியன் பட்டத்தினை தனதாக்கிக் கொண்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg