Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ரகுமானிடம் கேட்கப்பட்ட கேள்வி:வியக்க வைக்கும் பதில்

In சினிமா
Published: 06:03 GMT, Sep 10, 2017 |
0 Comments
1194
icon_com
This post was written by : Kemasiya

வருடத்திற்கு 50 படங்களுக்கு இசையமைத்ததில் எத்தனை ஹிட் ஆகியிருக்கின்றது என்னும் ரகுமானின் பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனியார் தொலைக்காட்சி செவ்வி ஒன்றின் பொழுது கேட்கப்பட்ட கேள்விக்கே ரகுமான் இவ்வாறு பதில் கூறியுள்ளார்.

அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி 80-90களில் இளையராஜா உட்பல பல இசையமைப்பாளர்கள் வருடத்திற்கு 50 பாடல்களை கூட இசையமைத்துள்ளார்கள். அவற்றில் பல விடயங்களும் இருந்துள்ளன. ஆனால் இப்பொழுது இசையமைப்பாளர்கள் வருடத்திற்கு ஒரு படம், இரண்டு படம் இசையமைப்பதே பெரிய விடயமாகவுள்ளது. திரைத்துறை மாறியுள்ளதா?அல்லது இசையமைப்பாளர்களின் மனநிலை மாறியள்ளதா? உங்களுக்கும் சேர்த்து நான் கேட்கின்றேன்?

இதுவே குறித்த கேள்வியாகும். இதற்கு பதில் கூறிய ரகுமான்,

வருடத்திற்கு 40-50 பாடல்களை இசையமைப்பது இலகு தான். ஆனால் அவையெல்லாம் ஹிட் ஆகின்றதா? என்பதை தான் பார்க்க வேண்டும். ஐம்பது பாடல்களில் ஐந்து பாடல்கள் தான் ஹிட் ஆகலாம். மீதி ஒரே மாதிரியாக இருக்க கூடும். நான் ஒரு இசையமைப்பாளரை மட்டும் சொல்லவில்லை. நான் தெலுங்கு திரையுலகிலும் பணியாற்றியுள்ளளேன்.

நான் பணத்திற்காக இசையமைக்கவில்லை. இசை மீதான ஆர்வத்தில் செய்கின்றேன். நமக்கு புதுமையான சிந்தனைகள் எவ்வளவு வரும்? எவ்வளவு தூரம் புதுப்பித்துகொள்கின்றோம்? என்பது முக்கியம்.

எனக்கு எல்லாம் சுலபமாக முடிந்தால் பிடிக்காது. கஸ்ரப்பட்டு நிறைய புதுமைகளை உள்ளடக்கி புதுசா ஹிட்டான ஒரு பாடல் கொடுத்தாலும் சந்தோஷம். அந்த சந்தோசம் தான் எனக்கு வேண்டும் என பதில் கொடுத்துள்ளார்.

அவரின் இந்தப் பதில் பலரையும் வியக்க வைத்துள்ளது. ஒரு வேளை இவர் இளையராஜாவை மட்டம் தட்டுகின்றாரோ, அவரின் பாடல்கள் 50 வந்தாலும் 5தான் ஹிட்டாகுமென சுட்டிக் காட்டுகின்றாரோ? என அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg