Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிழக்கில் சுகாதார வைத்திய அதிகாரியின் நிா்வாக எல்லைகளில் மாற்றம்!

In இலங்கை
Updated: 05:45 GMT, Sep 10, 2017 | Published: 05:45 GMT, Sep 10, 2017 |
0 Comments
1314
This post was written by : Ravivarman

ஏறாவூர் நகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலிருந்து செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரியின் பிரிவுக்குள் இணைக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் முன்பிருந்தவாறு நடைமுறைப்படுத்த உடன் நடவடிக்கை எடுக்குமாறு மட்டக்களப்பு, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தினால் பணிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மேற்படி சுகாதார வைத்திய அதிகாரி நிருவாக எல்லைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டமை தொடர்பான சுகாதார அமைச்சரின் 09.08.2017ஆம் திகதிக் கடிதம் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுச் செயலாளரது 10.08.2017 திகதியிட்ட கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

இதற்கமைவாக ஏறாவூர் நகர சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலிருந்து செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுக்குள் இணைக்கப்பட்ட பகுதிகளை மீளவும் எவ்வித மாற்றமுமின்றி 2016ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தவாறு நடைமுறைப்படுத்த உடன் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவின் சுகாதார சேவைகள் பராமரிப்பிலிருந்த ஏறாவூர் 4ஆம் 5ஆம் குறிச்சிகள் மற்றும் எல்லை நகர் ஆகிய கிராமங்கள் கடந்த ஆண்டு (2016) ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி நிருவாகப் பிரிவுக்குள் இணைக்கப்பட்டன.

இதன்படி இம்மூன்று ஊர்களிலும் 1140 குடும்பங்களைச் சேர்ந்த 3892 பேர் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவின் கீழ் கடந்த 20 மாதகாலமாக நிர்வகிக்கப்பட்டு வந்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg