Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியாவின் செயற்பாட்டால் பாரிய நெருக்கடி – ஐ.நா.

In உலகம்
Updated: 06:39 GMT, Sep 10, 2017 | Published: 06:39 GMT, Sep 10, 2017 |
0 Comments
1368
This post was written by : Suganthini

வடகொரியாவின் செயற்பாட்டால், உலகில் பாரிய நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார்.

பிரெஞ்சுப் பத்திரிகையொன்றுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கிய நேர்காணலின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

வடகொரியாவானது ஏவுகணைப் பரிசோதனைகள் மற்றும் ஆறாவது அணுவாயுதப் பரிசோதனையை நடத்தியுள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் ஹைட்ரஜன் எனப்படும் வெடிகுண்டை வடகொரியா பரிசோதித்துள்ளது.

இந்நிலையில், வடகொரியாவின் செயற்பாடு தொடர்பிலும் அவர் தனது கவலையை வெளியிட்டுள்ளார்.

வடகொரியாவானது தனது அணுவாயுதச் சோதனை மற்றும் ஏவுகணைச் சோதனையைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களைப் பின்பற்றுவதைத் தொடர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg