Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

லலித் வீரதுங்கவுக்கு வழங்கிய தண்டனையால் மஹிந்த அதிர்ச்சி!

In இலங்கை
Updated: 10:11 GMT, Sep 10, 2017 | Published: 07:10 GMT, Sep 10, 2017 |
0 Comments
4326
icon_com
This post was written by : Ravivarman
zzVjbmg

எனது முன்னாள் செயலாளர் லலித் வீரதுங்கவுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து நான் வியப்படைந்துள்ளேன் என முன்னாள் ஜனாதிபதியும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டி தலதா மாளிகையில் நேற்று (சனிக்கிழமை) வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

”எனது முன்னாள் செயலாளர் லலித் வீரதுங்கவுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து நான் அதிர்ச்சி அடைந்துள்ளேன். மிகப்பெரிய தொகையினை அவர்களால் குற்றப்பணமாகச் செலுத்த முடியாது.

மேலும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சிமன்ற தேர்தல் திருத்தம் தொடர்பில் உரிய தலைவர்களுடன் நாம் கலந்துரையாட இருக்கின்றோம்.

அரச அதிகாரிகளுக்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் இல்லாமல் செய்யப்படுவது பிரச்சினைக் குரிய விடயம்” என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg