Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியாவுடனான போட்டியில் நடந்த சூழ்ச்சி! – கூறுகின்றார் தரங்க

In கிாிக்கட்
Updated: 07:35 GMT, Sep 10, 2017 | Published: 07:14 GMT, Sep 10, 2017 |
0 Comments
6312
This post was written by : Puvanes
tharanga001

இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதிக்கொண்ட டி 20 போட்டியில் இடம்பெற்ற முறைக்கேடு தொடர்பில் இலங்கை அணித்தலைவர் உபுல் தரங்க தகவல் வெளியிட்டுள்ளார்.

அண்மையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற டி 20 போட்டியின் போது நாணயச் சுழற்சியில் சூழ்ச்சி இடம்பெற்றதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், நாணயச் சுழற்சியின் முடிவு தொடர்பில் ஊடகங்கள் பிழையான கருத்துகள் வெளிப்படுத்தப்படுவதாக தரங்க குறிப்பிட்டுள்ளார்.

குறித்த போட்டியில் நாணயச் சுழற்சியின் போது இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி ‘தலை’ எனக் கேட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து கீழே விழுந்த நாணயம் ‘பூ’ என போட்டி தீர்ப்பாளர் தெரிவித்தார்.

எனினும் தொகுப்பாளராக கடமையாற்றிய இந்திய அணியின் முன்னாள் வீரர் முரளி கார்த்திக் ‘தலை’ எனத் தெரிவித்து, கோஹ்லிக்கே நாணயச் சுழற்சி வெற்றி எனத் தெரிவித்து ஒலி வாங்கியினையும் கோஹ்லியிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் போட்டித் தீர்பாளர் இடையில் வந்து, கையை நீட்டி தவறினை சுட்டிக்காட்டிய போதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் சபையும் குறித்த சம்பவம் சரியானது என உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தினூடாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg