Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மோடியால் பிரிந்தது இளம்குடும்பம்: பொலிஸில் முறைப்பாடு

In இந்தியா
Published: 09:09 GMT, Sep 10, 2017 |
0 Comments
3817
icon_com
This post was written by : Surenth
Modi

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோருடைய ஒளிப்படத்தை வரைந்த பெண்ணை, அவரது கணவர் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். பசாரிக்பூர் கிராமத்தை சேர்ந்தவர் நக்மா பர்வின் என்ற பெண்ணுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நக்மா பர்வின் என்பவருக்கும் பர்வேஸ் கான் என்பவருக்கும் இடையில் சிக்கந்தர்பூர் பொலிஸ் நிலைய பகுதியில் கடந்த நவம்பரில் கல்யாணம் நடைபெற்றது.

இருவரும் மகிழ்ச்சியாக இருந்த நிலையில், நக்மா பர்வின் பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோருடைய ஒளிப்படத்தை வரைந்துள்ளார்.

இதனையடுத்து, நக்மா பர்வினை அவரது கணவர் குடும்பத்தினர் தாக்கியதுடன் வீட்டை விட்டும் வெளியேற்றியுள்ளனர். இதனால் அவர் தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதுகுறித்து பர்வினின் தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டில், ‘தனது மகள் பிரதமர் மோடி மற்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை ஒளிப்படமான வரைந்தார். இதைக்கண்ட கணவர் வீட்டார் அவரை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர்’ என குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், குறித்த குற்றச்சாட்டை பர்வின் கணவர் குடும்பத்தினர் மறுத்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg