Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கரீபியனுக்கு அனுப்பிவைக்கப்பட்ட பிரித்தானியப் படையினர்

In
Published: 09:10 GMT, Sep 10, 2017 |
0 Comments
1063
icon_com
This post was written by : Suganthini
uk

கரீபியன் பிராந்தியத்தில் ‘எர்மா’ புயல் தாக்கியுள்ளதைத் தொடர்ந்து, அங்கு உதவி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக படையினரை பிரித்தானியா அனுப்பி வைத்துள்ளது.

இந்நிலையில், மேற்படி பகுதியில் மீட்புப் பணி நடவடிக்கை சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் மைக்கேல் பஃலூன் தெரிவித்துள்ளார்.

இந்த ‘எர்மா’ புயல் கிழக்குக் கரீபியன் பிராந்தியத்தை நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) தாக்கியுள்ளது. இந்நிலையில், 21 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பிராந்தியத்தில் மீட்புப் பணி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கில், படை வீரர்கள் 500 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் மீட்புப் பணி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg