Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழகம் இன்றும் மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

In இந்தியா
Published: 09:22 GMT, Sep 10, 2017 |
0 Comments
1217
This post was written by : Surenth
Tamil Nadu

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளது.

தென்தமிழகம் மற்றும் அதனை அண்டியுள்ள கடற்பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் அடை மழை பெய்வதற்கான அறிகுறிகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகட்சமாக வேலூர் மாவட்டம் ஆலங்காயத்தில் 7 சென்ரி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாகவும் ஆம்பூர், பாம்பன், ஊத்தங்கரை, தளி மற்றும் திருப்பத்தூரில் தலா 4 சென்ரி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg