Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இட்லி பக்கோடா!

In
Published: 09:17 GMT, Sep 10, 2017 |
0 Comments
1139
icon_com
This post was written by : Vithushagan
idli-pakora-yaalaruvi

மாலை சுவையான ஸ்நாக்ஸ் இட்லி பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

இட்லி – 6
பெரிய வெங்காயம் – 100 கிராம்
சோம்பு – கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்
பூண்டு விழுது – 50 கிராம்
அரிசி மாவு – 100 கிராம்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

* ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, பெருங்காயத்தூள், பொடித்த சோம்பு, உப்பு, பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு பக்கோடா மாவு பதத்தில் தயார் செய்துகொள்ளவும்.

* வெங்காயத்தை நீளமாக நறுக்கி அதில் சேர்க்கவும். இட்லியைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து, இட்லித் துண்டுகளை தயாரித்து வைத்துள்ள மாவில் போடவும். பிறகு, மாவைக் கிள்ளியெடுத்து எண்ணெயில் போட்டு மொறுமொறுவென வந்ததும் எடுத்து பரிமாறவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg