Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேனா மூலம் பரீட்சை எழுத தடை

In
Published: 09:28 GMT, Sep 10, 2017 |
0 Comments
1170
icon_com
This post was written by : Suganthini
pen

பிரித்தானியாவில் மாணவர்களின் கையெழுத்தில் தெளிவின்மை காணப்படுவதால், லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேனா மூலம் பரீட்சை எழுதுவதற்குத் தடை விதிக்கப்படவுள்ளது.

இந்தப் பல்கலைக்கழகத்தால்; நடத்தப்படும் பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர்கள், விடைத்தாள்களில் பேனாவைப் பயன்படுத்தியே இதுவரைகாலமும் எழுதி வந்துள்ளனர்.

தற்போது மாணவர்கள் மத்தியில் மடிக்கணினி பாவனை வந்துள்ளமையால், அவர்களின் கையெழுத்தில் தெளிவின்மை காணப்படுகின்றது. இது பரீட்சைகளின்போது பிரதிபலிக்கின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களின் எண்ணிக்கையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

எனவே, இதைக் கருத்திற்கொண்டு மாணவர்கள் பேனா மூலம் எழுதத் தடை விதிக்கப்பட்டு, புதிய முறையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாணவர்களின் எழுத்தில் தெளிவின்மையால், விடைத்தாள்களைத் திருத்தும் பேராசிரியர்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg