Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் ஆளுநருக்கு எதுவும் தெரியாது: மு.க.ஸ்டாலின்

In இந்தியா
Published: 09:44 GMT, Sep 10, 2017 |
0 Comments
1124
icon_com
This post was written by : Surenth
MK.Stalin

பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்கு எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை என்பது கூட தமிழக ஆளுநருக்கு தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது என தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.வி காமராஜ் இல்லத் திருமண விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர், இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க.வினர் பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும் அ.தி.மு.க.வினரே, அரசுக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய ஆட்சியில் 114 சட்டமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே அரசுக்கு ஆதரவாக உள்ளதாகவும் இந்த கணக்கு கூட தெரியாத ஆளுநர் தமிழகத்துக்கு தேவையா என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

அத்துடன், கொள்ளைப்புறமாக ஆட்சிக்கு வரவேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு இல்லை என்றும், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக ஆளுநருக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg