Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அ.தி.மு.க. ஆட்சியை தி.மு.க.வுக்கு அடகு வைக்க சிலர் துடிக்கின்றனர்: திண்டுக்கல் சீனிவாசன்

In இந்தியா
Updated: 12:00 GMT, Sep 10, 2017 | Published: 11:22 GMT, Sep 10, 2017 |
0 Comments
1077
icon_com
This post was written by : Surenth
Dindigul Srinivasan

ஜெயலலிதாவுடன் 32 ஆண்டுகள் இருந்த குடும்பம் அ.தி.மு.க. ஆட்சியை தி.மு.க.வுக்கு அடகு வைக்கத் துடிப்பதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

தருமபுரியில் அடுத்த மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழா கால்கோள் விழாவைத் தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள ஆட்சியைக் கலைத்துவிட்டு முதலமைச்சர் ஆகிவிடும் கனவில் மு.க.ஸ்டாலின் ஆளுநர் மாளிகைக்கு செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை வைத்து, சிலர் ஆட்சியை கைப்பற்ற நினைப்பதாகவும் அது ஒரு போது சாத்தியப்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், அ.தி.மு.க.வில் இருந்து யார் சென்றாலும் அ.தி.மு.க.வை யாராலும் அசைக்கவும் முடியாது எனவும் அ.தி.மு.க. அரசை யாரும் கவிழ்க்கவும் முடியாது எனவும் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg