Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வடகொரியாவை இராஜதந்திர ரீதியில் அணுகுவதே சிறந்த வழி – ஜேர்மன்

In ஐரோப்பா
Published: 09:59 GMT, Sep 10, 2017 |
0 Comments
1072
icon_com
This post was written by : Suganthini
german

வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுவாயுதப் பரிசோதனைகளைச் சமாளிப்பதற்கு, வடகொரியாவை இராஜதந்திர ரீதியில் அணுகுவதே சிறந்த வழி என ஜேர்மன் அதிபர் அஞ்சலா மெர்கல் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இராஜதந்திர தீர்வைக் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஐரோப்பிய ஒன்றியம் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பத்திரிகையொன்றுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கிய நேர்காணலின்போதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.

வடகொரியாவின் அணுவாயுதத் திட்டம் தொடர்பான சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், இராஜதந்திர முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இந்த இராஜதந்திர முயற்சியின் மூலம் வடகொரியாவின் எதிர்மறையான செயற்பாட்டை முடிவுக்குக் கொண்டுவர முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், வடகொரியாவின் ஆறாவது அணுவாயுதப் பரிசோதனையால், கொரிய தீபகற்பத்தில் அதிகரித்துக் காணப்படும் பதற்ற நிலைமை மற்றும் உலக நிதிச் சந்தையில் ஏற்பட்டுள்ள பாதிப்புத் தொடர்பிலும் இதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg