Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்மார்ட்போன் விற்பனையில் அப்பிளை முந்திய சீன நிறுவனம்!

In தொழில்நுட்பம்
Updated: 10:09 GMT, Sep 10, 2017 | Published: 10:09 GMT, Sep 10, 2017 |
0 Comments
1806
This post was written by : Vithushagan

சர்வதேச ஸ்மார்ட்போன் விற்பனையில் இரண்டாம் இடத்தில் இருந்த அப்பிள் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. தொடர்ந்தும் முதலிடத்தில் சாம்சங் நிறுவனம் உள்ளது.

அனைவரும் வாங்கக் கூடிய விலையில் தலைச்சிறந்த சிறப்பம்சங்கள் கொண்டிருந்ததால் ஹூவாய் நிறுவன ஸ்மார்ட்போன்கள் அதிக பிரபலமாகியுள்ளன. டூயல் கேமரா, பெரிய டிஸ்ப்ளே மற்றும் சக்திவாய்ந்த சிறப்பம்சங்கள் உள்ளிட்டவையும் விற்பனை அதிகரிக்க முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.

தெற்கு ஆசியா, இந்தியா மற்றும் வட அமெரிக்க சந்தைகளில் அதிக பிரபலமாக இல்லாததே சாம்சங் நிறுவனத்தை முந்தி ஹூவாய் நிறுவனம் முதலிடம் பிடிக்க முடியாததற்கு முக்கிய காரணம் என கவுண்ட்டர்பாயின்ட் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் ஹூவாய் நிறுவனம் தற்சமயம் சீனா, ஐரோப்பா, லத்தின் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு சந்தைகளை அதிகம் எதிர்பார்த்திருக்கிறது.

ஆப்பிள் நிறுவனம் இரண்டாவது இடத்தை இழந்திருந்தாலும், ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ் ஸ்மாப்ட்போன்கள் சர்வதேச சந்தையில் அதிகம் விற்பனை செய்யப்படுவதாக கவுண்ட்டர்பாயிண்ட் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg