Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நெருப்புடா:படம் எப்படி?

In திரை விமர்சனம்
Published: 11:21 GMT, Sep 10, 2017 |
0 Comments
1188
This post was written by : Kemasiya
1504779895-6194

நாயகன் விக்ரம்பிரபு சிறுவயதில் இருந்தே தீயணைப்பு வீரராக வேண்டும் கனவோடு இருந்து வருகிறார். இவரது நண்பர்கள் நான்கு பேரும் இவருடன் இணைந்து அதே நோக்கத்துடன் இருந்து வருகிறார்கள். வேலை கிடைக்கும் வரை ஒரு வண்டியை வைத்துக் கொண்டு எங்கெல்லாம் தீ பிடிக்கிறதோ அங்கு சென்று தீயை அணைத்து உயிர்களை காப்பாற்றி வருகிறார்கள்.

தீயணைப்பு தேர்வுக்கு முன் தினம் விக்ரம்பிரபுவின் நண்பரில் ஒருவரான வருணிடம் அந்த பகுதியின் ரவுடியான வின்சென்ட் அசோகன் வம்புக்கு இழுக்க அவர் அந்த ரவுடியை கீழே தள்ளிவிடுகின்றார். இதில் எதிர்பாராத விதமாக வின்சென்ட் அசோகன் இறந்து விடுகிறார்.
இதிலிருந்து விடுபட விக்ரம்பிரபு மற்றும் நண்பர்கள் ஏரியா கவுன்சிலர் மொட்டை ராஜேந்திரனின் உதவியை நாடுகிறார்கள். இறந்தவர் ஊரிலேயே பெரிய தாதாவாக இருக்கும் மதுசூதனனின் நண்பர் என்று அனைவருக்கும் தெரியவருகிறது. இதையறிந்த மொட்டை ராஜேந்திரன் உதவி செய்ய மறுக்கிறார்.

வின்சென்ட் அசோகன் இறப்புக்கு காரணமாக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் விக்ரம் பிரபு, மதுசூதனன் நம்மை தேடி வருவதற்கு முன், நாம் மதுசூதனை கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள். ஆனால், விக்ரம்பிரபு மற்றும் நண்பர்களில் ஒருவர்தான் கொலை செய்திருக்க வேண்டும் என்பதை கண்டுபிடிக்கும் மதுசூதனன், விக்ரம்பிரபுவை மிரட்டிவிட்டு செல்கிறார்.

இறுதியில், மதுசூதனனிடம் இருந்து விக்ரம்பிரபும் அவரது நண்பர்களும் தப்பித்தார்களா? விக்ரம் பிரபுவின் லட்சியம் நிறைவேறியதா? என்பதே மீதிக்கதை.

மொத்தத்தில் நெருப்புடா…கொஞ்சம் சிறப்புடா…

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg