Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சரின் கூற்று தவறானது – ரஷ்யா கண்டனம்

In
Published: 10:32 GMT, Sep 10, 2017 |
0 Comments
1134
icon_com
This post was written by : Suganthini
RUSSA

பெலராஸில் நடைபெறவுள்ள கூட்டு இராணுவப் பயிற்சிக்கு, ஒரு இலட்சத்துக்கும் அதிகளவான படையினரை மொஸ்கோ அனுப்பத் திட்டமுள்ளது என்று ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் தவறாகக் கூறியுள்ளார் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் உர்சுலா வொன் டெர் லியனின் கருத்துக்கு நேற்று (சனிக்கிழமை) அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளமையின் மூலம், பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பெலராஸில் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 20ஆம் திகதிவரை, ‘ஸபோட் 2017′ எனும் பெயரில் கூட்டுப் பயிற்சி நடைபெறவுள்ளது.

இதில் ரஷ்யா மற்றும் பெலராஸைச் சேர்ந்த 12 ஆயிரத்து 700 படையினர் பங்குகொள்ளவுள்ளனர்.
தற்பாதுகாப்புக் கருதி இந்தப் பயிற்சி முன்னெடுக்கப்படுகின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg