Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

களத்தில் உலக அணி! – வரலாற்றில் ஓர் திருப்பம்

In கிாிக்கட்
Published: 10:38 GMT, Sep 10, 2017 |
0 Comments
5450
This post was written by : Puvanes
world11_pakistan001

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள உலக லெவன் அணி மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

குறித்த போட்டிகளின் நிமித்தம், தற்போது துபாய் சென்றுள்ள உலக லெவன் அணியானது ஒன்றிணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

எதிர்வரும் 12, 13 மற்றும் 15 ஆம் திகதிகளில், தென்ஆபிரிக்காவின் டு பிளிசிஸ் தலைமையிலான உலக லெவன் அணியானது பாகிஸ்தானின் சொந்த மண்ணில் அதனை எதிர்கொள்ளவுள்ளது.

2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான் விஜயத்தினை மேற்கொண்ட இலங்கை அணியின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்ட காரணத்தினால் பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகள் நடைபெறவில்லை.

இந்த நிலையில் பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச போட்டிகள் நடத்துவதற்கு முன்னோட்டமாகவே உலக லெவன் அணி பாகிஸ்தானில் விளையாடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகல் வரலாற்று திருப்பமாக இடம்பெறவுள்ள காரணத்தினால், குறித்த போட்டிகளுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.

இதேவேளை, உலக லெவன் அணியின் பின்னர் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணத்தினை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg