Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வவுனியாவில் நடமாடும் சேவை!

In இலங்கை
Updated: 12:18 GMT, Sep 10, 2017 | Published: 10:51 GMT, Sep 10, 2017 |
0 Comments
1101
icon_com
This post was written by : Ravivarman
IMG_4733

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை வவுனியா இலங்கை திருக்கலவன் பாடசாலையில் இடம்பெற்றது.

மக்களின் தேவைகளை இலகுபடுத்த இன்ற (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இந் நடமாடும் சேவையில் மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது பிறப்பு சான்றிதழ் மொழிபெயர்ப்பு மற்றும் புதிதாக பெற்றுக்கொள்ளல், விவாகமாகாத தம்பதியினருக்கு புதிதாக விவாகம் செய்து வைத்தல், தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளுவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கை, அரச காணி மற்றும் கமநல சேவை தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு, ஒய்வூதியம், நீர் மற்றும் மின்சாரம் தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு போன்ற பல்வேறு சேவைகளை மக்கள் பெறுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இதன் போது தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் பிரத்தியேக செயலாளர் பிரியான் குணவர்த்தன, அமைச்சின் மேலதிக செயலாளர் திலகரட்ன, தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் ரஞ்சிதா வியாங்கொட, உதவி செயலாளர் சி. மதிவாணன், வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், பிரதேச செயலாளர் கா.உதயராஜா, உதவி பிரதேச செயலாளர் சாரதாதேவி மற்றும் அரச ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

IMG_4763 IMG_4751 IMG_4746 IMG_4730

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg