Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரான்சில் உருவாகும் பிரித்தானிய கடவுச் சீட்டுக்கள்

In
Updated: 10:42 GMT, Sep 10, 2017 | Published: 10:42 GMT, Sep 10, 2017 |
0 Comments
1448
This post was written by : elayathambi

பிரெக்சிற்றிற்குப் பின்னரான பிரித்தானியக் கடவுச் சீட்டுகள் பிரான்சில் உருவாகவிருக்கின்றன. நீல நிறத்திலான பாரம்பரிய பிரித்தானியக் கடவுச் சீட்டுக்களாக இவை வடிவமைக்கப்படவுள்ளன.

புதிய கடவுச் சீட்டின் வடிவமைப்பை ஐரோப்பிய நிறுவனம் ஒன்று பொறுப்பெடுக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தயாரிப்பதற்கான தேர்வில் இரண்டு நிறுவனங்கள் இறுதியாகத் தெரிவாகி உள்ளன.

ஒரு நிறுவனம் பிரான்சையும் மற்றையது ஜேர்மனியையும் சேர்ந்தவையாகும்.  கடவுச் சீட்டை பிரித்தானியாவிற்கு செய்து வழங்கும் 490 மில்லியன் பெறுமதியான இந்த ஒப்பந்தத்தில் எந்த நிறுவனம் இறுதியாக தேர்வாகும் என்பதை அடுத்த கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் முன்னர் பிரித்தானியா அறிவிக்க இருக்கிறது.

வெற்றி பெற்று ஒப்பந்தத்தில் தேர்வாகும் நிறுவனம் ஆண்டொன்றிற்கு 6 மில்லியன் கடவுச் சீட்டுக்களை தயாரிக்கும்.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg