Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தேயிலைத் தோட்டங்களில் சோளம் பயிரிடுவதற்கு எதிர்ப்பு!

In இலங்கை
Published: 11:04 GMT, Sep 10, 2017 |
0 Comments
1217
icon_com
This post was written by : Ravivarman

தேயிலைக் காணியில் சோளம் பயிரிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தோட்டத்தொழிலாளர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஹென்போல்ட் தோட்டத்தில் உள்ள கொழுந்து மடுவத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்தில் 08 ஏக்கர் தேயிலை மலைகளை தோட்ட நிர்வாகம் முறையாக பராமரிக்காமல் காடாக காணப்படுகின்றது.

இதேவேளை இத்தோட்டத்தில் நல்ல விளைச்சலை தந்த 05 ஏக்கர் தேயிலை மலையினை 2010 ஆம் குத்தகை அடிப்படையில் தனியாருக்கு விவசாயம் செய்ய வழங்கியது.

அப்போது தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களிடம் வழங்கப்பட்ட காணியின் குத்தகை முடிந்தப்பின் மீண்டும் தேயிலை கன்றுகள் நாட்டப்படும் என தோட்ட நிர்வாகம் தெரிவித்ததையடுத்து விவசாயம் நடவடிக்கை முன்னெடுக்கப்படது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு மூடப்பட்டுள்ள காணிகளை துப்பரவு செய்து தேயிலை கன்றுகள் நாட்டுமாறும் சோளப்பயிர் செய்கையை கைவிடுமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது ஆதங்கத்தினை வெளிப்படுத்தினர்.

மலையக அரசியல்வாதிகளும் தோட்ட நிர்வாகங்களும் தங்களின் நலன்களில் மாத்திரம் கருத்தில் கொண்டு செயற்ப்படுவதை கைவிட்டு எங்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்வர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இவ்வார்ப்பாட்டம் சுமார் 2 மணி நேரம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

DSC07856 DSC07852 DSC07845 DSC07843 - Copy

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg