Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு நிதி உதவி: பிரதமர்!

In இலங்கை
Updated: 11:49 GMT, Sep 10, 2017 | Published: 11:17 GMT, Sep 10, 2017 |
0 Comments
1119
icon_com
This post was written by : Vithushagan
Ranil

சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு ஒரு ஹெக்டயர் நிலப்பரப்பில் மீண்டும் உற்பத்தியை மேற்கொள்வதற்காக ஐந்து இலட்சம் ரூபா நிவாரண உதவி வழங்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

காலி மாவட்டத்தில் சமீபத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு நஷ்டஈடு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அறுவடைகள் பெறப்படும் வரையில் சிறிய தோட்ட உரிமையாளர்களை ஊக்குவிப்பதற்காக கொடுப்பனவுகளை வழங்குவதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

தேயிலை, தெங்கு, றப்பர் உற்பத்திக்கு தேவையான உரத்தை வழங்குவதற்காக அரசாங்கம் 200 கோடி ரூபா நிதியை ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் உள்ள சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு உரமானியமாக 47 கோடி ரூபா தற்போது வழங்கப்பட்டுள்ளது. இதில் 16 கோடி ரூபா காலி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg