Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஓரினத் திருமணத்திற்கு சட்டரீதியாக தயாராகிறது அவுஸ்திரேலியா

In
Updated: 11:44 GMT, Sep 10, 2017 | Published: 11:42 GMT, Sep 10, 2017 |
0 Comments
1126
icon_com
This post was written by : elayathambi
Australia

அவுஸ்திரேலியாவின் திருமணச் சட்டத் திருத்தத்திற்கான பேரணியொன்று இன்று சிட்னியில் இடம்பெற்றது. ஓரினத் திருமணத்தை சட்ட ரீதியாக அங்கீகரிப்பதை வலியுறுத்தும் இப்பேரணிக்கான ஆதரவை அவுஸ்திரேலியாவின் அரசியல் தலைமைகள் இன்று அங்கீகரித்துள்ளன.

இப்பேரணியில் எதிர்பாரதவகையில் பிரசன்னமான நாட்டின் பிரதமர் மல்கம் ரெர்ன்புல் (Malcolm Turnbull) தனது ஆதரவினை வெளிப்படுத்தி உள்ளமை குறிப்பிடத் தக்கது.

இருபதினாயிரத்திற்கும் அதிகமான ஆதர்வாளர்கள் பங்கேற்ற இப்பேரணியில் உரையாற்றிய பிரதமர் , ஓரின மணவாளர்களை புறம்தள்ளுவதையோ தாழ்த்துவதையோ நான் என்றும் ஏற்றுக் கொண்டதில்லை. ஏனைய தம்பதியருக்கான உரிமைகள் அவர்களுக்கும் வழங்கப்படவேண்டும் என்றே நான் கருதுகிறேன் என்று தெரிவித்தார்.

இத்தகைய ஓரினத் திருமணங்கள் சாதாரண திருமப் பாரம்பரியத்திற்கு குந்தகம் விளவிக்க மாட்டாது என்பதையும் அவர் வலியுறுத்தினார். ஏனைய 23 நாடுகள் இத்தகைய ஒரினத் திருமணங்களை அங்கீகரித்திருப்பதையும்  அவர் சுட்டிக்காட்டினார்.

விரைவில் அவுஸ்திரேலியாவில்  திருமணத் திருத்தச்  சட்டம் மேற்கொள்ளப்படவிருக்கிறது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg