Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இன்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அர்ஜூன் அலோசியஸ் ஆஜர்!

In இலங்கை
Updated: 11:56 GMT, Sep 10, 2017 | Published: 11:56 GMT, Sep 10, 2017 |
0 Comments
1497
This post was written by : Ravivarman

மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில், பர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியஸ் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) ஆஜராகியுள்ளார்.

சர்ச்சைக்குரிய பிணை முறி விவகாரத்தால் அரசாங்கத்திற்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதென குற்றஞ்சாட்டப்பட்டு, கடந்த ஒரு வருடத்திற்கும் அதிகமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அண்மையில் ஆணைக்குழுவில் வழங்கப்பட்ட சாட்சியில், மத்திய வங்கியின் பிணை முறி ஏல விற்பனை தொடர்பான இரகசிய தகவல்கள், ஏல விற்பனைக்கு முன்பாகவே அர்ஜூனுக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதுகுறித்த தொலைபேசி உரையாடல் பதிவும் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அதனடிப்படையிலேயே அர்ஜூன் அலோசியஸிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, தொடர்ச்சியாக இன்றுடன் நான்காவது நாளாக, இவர் இவ்வாறு வாக்குமூலம் அளிக்க ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg