Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹரியும், மேகனும் முதல் முறையாக ஒரே மேடையில்!

In கனடா
Updated: 12:07 GMT, Sep 10, 2017 | Published: 12:07 GMT, Sep 10, 2017 |
0 Comments
1466
This post was written by : Puvanes

கனடாவில் இடம்பெறவுள்ள நிகழ்வு ஒன்றில் பிரித்தானிய இளவரசரான ஹரியும், பிரபல அமெரிக்க நடிகையான மேகனும் ஒன்றாக பங்கு கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இருவருக்கும் இடையில் காதல் தொடர்பு உள்ளதாக விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வந்த நிலையில், அண்மையில் இருவருக்கும் இடையிலான காதல் தொடர்பு உண்மையே என மேகன் ஊடகம் ஒன்றிக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

அதன்பின்னர் ஹரியின் பிறந்த நாளை ஆபிரிக்கா சென்று கொண்டாடிய மேகன் இதுவரையிலும் பொது நிகழ்ச்சிகளில் ஹரியுடன் இணைந்து சென்றதில்லை.

எனினும் அவர்கள் இருவரும் எதிர்வரும் 23ஆம் திகதி கனடாவில் நடைபெறவுள்ள, உலகமெங்கும் உள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு நம்பிக்கையோடு வாழும் இராணுவ வீரர்கள் கலந்து கொள்ளும் விளையாட்டு நிகழ்வில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg