Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இளம் தம்பதி கௌரவக் கொலை : குற்றவாளிகளை இந்தியாவிடம் ஒப்படைத்தது கனடா நீதிமன்றம்

In கனடா
Updated: 09:14 GMT, Sep 12, 2017 | Published: 12:40 GMT, Sep 10, 2017 |
0 Comments
1384
icon_com
This post was written by : Puvanes
canada003

கௌரவக் கொலை வழக்கு தொடர்பாக கனடாவில் வசித்து வரும் இருவரை இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப கனடாவின் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பில் தெரியவருவதாவது,

இந்தியாவைச் சேர்ந்த சுர்ஜீத் சிங் படேஷா, அவரது சகோதரி மல்கித் கவுர் சித்து, மல்கித்தின் மகள், ஜஸ்வீந்தர் கவுர், ஆகியோர் கனடாவில் குடியுரிமைப் பெற்று வசித்து வந்துள்ளனர்.

ஜஸ்வீந்தர் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திற்கு வந்திருந்தபோது. மிது சித்து என்பரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதன் பின்னர் கனடாவிற்கு திரும்பிச் சென்றுள்ளார்.

பின்னர் குறித்த திருமணம் தொடர்பில் தாயாரிடமும், மாமாவிடமும் ஜஸ்வீந்தர் தெரிவித்த பின்னர். கணவனுடன் சேர்ந்து வாழ ஜஸ்வீந்தர் மீண்டும் இந்தியா திரும்பி வந்துள்ளார்.

பின்னர் 2000 ஆம் ஆண்டு ஜஸ்வீந்தர் மற்றும், மிது சித்து மர்மக் கும்பலினால் இந்தியாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கூலிப்படையினைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டதோடு, அவர்களை கனடாவில் வசிக்கும் ஜஸ்வீந்தரின் தாயாரும், மாமாவுமே ஏவிவிட்டதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து குறித்த சந்தேக நபர்களை இந்தியாவிற்கு திருப்புமாறு இந்திய மத்திய அரசு, கனடாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கனடாவின் நீதித்துறை அமைச்சர் அதற்கு ஒப்புதல் வழங்கினார்.

எனினும் அதற்கு எதிராக மேன் முறையீடு செய்து ஜஸ்வீந்தரின் தாயாரும், மாமாவும் வழக்கு தாக்கல் செய்தனர். அதனைத் தொடர்ந்து 9 நீதிபதிகள் அடங்கிய குழு வழக்கு தொடர்பில் விசாரணை செய்துள்ளது.

விசாரணையின் பின்னர் இருவரையும் இந்தியாவிற்கு திருப்பியனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்போது “கௌரவக் கொலை என்ற பெயரில் இளம் தம்பதியை கொலை செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)