Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நம்பிக்கையில்லா தீா்மானத்தை தைரியமாக எதிர்கொள்வோம் : ஜெயக்குமாா்

In இந்தியா
Published: 16:53 GMT, Sep 10, 2017 |
0 Comments
1181
This post was written by : Vithushagan
download (1)

எதிா்க்கட்சி தலைவா் ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவந்தால் அதனை தமிழக அரசு எதிா்கொள்ளும் என்று அமைச்சா் ஜெயக்குமாா் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் அமைச்சா் ஜெயக்குமாா் செய்தியாளா்கள் மத்தியில் பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ” தமிழகத்தில் அறுதி பெரும்பான்மையுடன் ஜெயலலிதாவின் அரசு செயல்பட்டு வருகிறது.

ஆளுநா் வித்யாசாகா் ராவ் அரசியலமைப்பு சட்டத்தின் படியே செயல்பட்டுக் கொண்டு இருக்கிறாா். சட்டமன்றத்தை கூட்டுவதற்கு எதிா்க்கட்சித் தலைவா் ஸ்டாலினுக்கு அதிகாரம் கிடையாது.

சட்டமன்றத்தில் ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீா்மானத்தை கொண்டுவரும் பட்சத்தில் தமிழக அரசு அதனை தைாியமாக எதிா் கொள்ளும். கட்சியின் விதிகளின் படியே பொதுக்குழுவை கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

கட்சியின் விதிமுறைகள் பின்பற்றப்பட்டது குறித்து நீதிமன்றத்தில் நிரூபிக்க தயாராக உள்ளோம். ஜி.எஸ்.டி. தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு சாா்பில் 60 பொருட்கள் மீதான வாிவிதிப்பில் மாற்றம் கொண்டுவர வலியுறுத்தப்பட்டுள்ளது” என அமைச்சா் ஜெயக்குமாா் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg