Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: ஒருவர் உயிருடன் கைது

In
Published: 03:27 GMT, Sep 11, 2017 |
0 Comments
1082
icon_com
This post was written by : Kemasiya
Indo-pak-720x480 (1)

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் அருகே பாதுகாப்பு படையினர் நடத்திய விசாரணையின் பொழுது முஜாகிதீன் திவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

குல்காம் அருகே தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி குறித்த பகுதியை சுற்றிவளைத்த படையினர் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர்.

பதிலுக்கு தீவிரவாதிகளும் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். சில மணி நேரங்கள் நீடித்த இந்த மோதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், ஒரு தீவிரவாதி உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் அங்கிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். வேறு தீவிரவாதிகள் அங்கு பதுங்கியுள்ளனரா என்றும் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல்  நடத்தி வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg