Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஸ்டாலினின் முடிவை வரவேற்கின்றேன்: திருமாவளவன்

In இந்தியா
Updated: 05:53 GMT, Sep 11, 2017 | Published: 05:53 GMT, Sep 11, 2017 |
0 Comments
1088
icon_com
This post was written by : Kemasiya
dsgv

ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம் செல்வோம் என்ற திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் முடிவை நான் வரவேற்கின்றேன். முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த, ஆளுநர் உத்தரவிட வாய்ப்பில்லை, மத்திய அரசின் நிலைப்பாடுதான் அதற்கு காரணம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

எவிடென்ஸ் கதிர் எழுதிய சாதி தேசத்தின் சாம்பல் பறவை என்ற நூலின் ஆய்வுக் கூட்டம், சென்னை மயிலாப்பூரில் நடைபெற்றது. நீதிக்கான கூடுகை என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பின் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அதிமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பம் என்பது உள்கட்சி விவகாரம் என மத்திய உள்துறை அமைச்சர் கூறியிருப்பதால், அதன்படிதான் ஆளுநர் நடந்து கொள்வார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg