Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கட்டார் விவகாரம் – 13 நிபந்தனைகளுக்கு உடன்படுமாறு வலியுறுத்தல்

In உலகம்
Published: 06:02 GMT, Sep 11, 2017 |
0 Comments
1600
icon_com
This post was written by : Suganthini
savuthi

கட்டாருக்கும் அரேபிய நாடுகளுக்கும் இடையில் காணப்படும் முறுகல் நிலைமையை முடிவுக்குக் கொண்டுவந்து, இராஜதந்திர உறவை மேற்கொள்வதற்கு கட்டார் விரும்பினால், 13 நிபந்தனைகளுக்கு கட்டார் உடன்பட வேண்டும் என்று சவூதி அரேபியா வலியுறுத்தியுள்ளது.

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவ் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில் சவூதி வெளிவிவகார அமைச்சர் அடல் அல் ஜுபைரை, ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதன்போதே, சவூதி வெளிவிவகார அமைச்சர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

இந்தக் கலந்துரையாடலின்போது, கட்டாருக்கும் சவூதிக்கும் இடையில் நேரடிப் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்கு தான் எண்ணியுள்ளதாக சவூதி வெளிவிவகார அமைச்சரிடம், ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த சவூதி வெளிவிவகார அமைச்சர், கட்டாருடன் இராஜதந்திர உறவைத் தொடரும் வகையில், முன் நடவடிக்கையாக கட்டார் குறிப்பிட்ட சில நிபந்தனைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்தல் மற்றும் நிதி உதவியளிப்பதை நிறுத்த வேண்டும், தீவிரவாத செயற்பாடுகளை பரப்புவதை நிறுத்த வேண்டும், அயல் நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட 13 நிபந்தனைகளை குவைட் மூலமாக கட்டாருக்கு வழங்கியுள்ளோம்.

இந்த நிபந்தனைகள் தொடர்பில் கட்டார் பதிலளிக்கும்வரை, தமது நிலைப்பாடு மாறாது எனவும் சவூதி வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.

கட்டார் பயங்கரவாதத்துக்கு உதவி அளிப்பதாகக் கூறி சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகள் கடந்த ஜுன் 5ஆம் திகதி கட்டாருடனான தமது இராஜதந்திர உறவை முறித்துக்கொண்டன.

இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டை கட்டார் நிராகரித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg