Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோஹ்லி விடயத்தில் கவனமாக இருப்போம்: ஸ்டீவ் ஸ்மித்

In விளையாட்டு
Updated: 06:16 GMT, Sep 11, 2017 | Published: 06:16 GMT, Sep 11, 2017 |
0 Comments
1987
This post was written by : Vithushagan

கடந்த முறை விராட் கோஹ்லி விடயத்தில் செய்த தவறை நிச்சயம் திருத்திக்கொள்வோம் என அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இந்தியா, அவுஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, எதிர்வரும் 17ஆம் திகதி சென்னையில்  நடை பெறவுள்ளது, இதில் பங்கேற்க சென்னை வந்துள்ள  அவுஸ்திரேலியா அணி வீரர்கள், தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இத்தொடர் குறித்து அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்மித் தெரிவிக்கையில்,” கடந்த முறை கோஹ்லி விடயத்தில் செய்த தவறை நிச்சயம் திருத்திக்கொள்வோம்.

கடந்த முறை டெஸ்ட் தொடரில் பங்கேற்ற போது, கோலியுடனான மோதல்களை நான் பெரிய விடயமாக  எடுத்துக்கொள்ளவில்லை.

அவர் சிறந்த வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.  ஆக்ரோஷம் இல்லாமல் அமைதி காப்பதே இம்முறை கோஹ்லி  விடயத்தில் எங்கள் திட்டம். இதை வெற்றி கரமாக செய்தாலே இத்தொடரில் எங்களுக்கு வெற்றி நிச்சயம்’ என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg