Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோஹ்லியை சச்சினுடன் ஒப்பிட முடியாது: அசாருதீன்

In விளையாட்டு
Published: 06:42 GMT, Sep 11, 2017 |
0 Comments
2212
This post was written by : Vithushagan
sachin-azhar-trail-virat-aims-bradman-s-record

இந்திய   அணியின்  தலைவர் விராட் கோஹ்லியை  சச்சினுடன் ஒப்பிட முடியாது என்று முன்னாள் அணித்தலைவர் மொகமட் அசாருதீன் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் மற்றும் கோலியின் அபாரமான ஆட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறுதெரிவித்துள்ளார்.

விராட் கோலி ஒரு  சிறப்பான வீரர், ஆனால் அவரை மற்றொருவருடன் ஒப்பிடுவது கடினம், சச்சின் ஆடும்போது  இருந்த சூழ்நிலைகள் வேறு, இப்போது உள்ள நிலமை வேறு இதற்கு  முன்னர் சுனில் கவாஸ்கர் வேறுவிதமான சவால்களை எதிர்கொண்டு மீண்டார்  என தெரிவித்துள்ளார்.

கோலி சிறந்த உடல் தகுதியுடன்   இப்படி  தொடர்ந்து விளையாடுவார் என்றால்   எந்த சாதனையையும் முறியடிக்க முடியும் ஆனாலும் இன்னும் கோஹ்லி நீண்ட தூரம் செல்ல வேண்டும் என அசாருதீன் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg