Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கிழக்கு கைத்தொழில் பொருட்களால் உள்ளூர் உல்லாசப் பயணிகள் கவரப்பட்டுள்ளனர்: இளங்குமுதன்

In இலங்கை
Published: 07:04 GMT, Sep 11, 2017 |
0 Comments
1070
icon_com
This post was written by : Anojkiyan
Australia v India: Semi Final - 2015 ICC Cricket World Cup

கிழக்கில் உருவாக்கப்படும் கைத்தொழில் உற்பத்திப் பொருட்களால் உள்ளூர் உல்லாசப் பயணிகள் கவரப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் கே. இளங்குமுதன் தெரிவித்துள்ளார்

கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ‘மலரும் கிழக்கு’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றுவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தகக் கண்காட்சி ஊக்குவிப்புக் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“கிழக்கு மாகாணத்தின் கைத்தொழில் உற்பத்தித்திறன் பங்களிப்பை அதிகரிக்கும் விதத்தில் தற்போது எமது திணைக்களம் மும்முரமாகச் செயற்பட்டு வருகின்றது. கிழக்கு மாகாண உற்பத்திப் பொருட்களின் தரத்தை பெறுமதி சேர் மட்டத்திற்கு கொண்டு சென்று தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் கேள்வியை அதிகரிக்கச் செய்வதும் உயர்ந்த மட்டத்தில் சந்தை வாய்ப்பை ஸ்திரப்படுத்திக் கொள்வதும் எமது நோக்கமாகும்.

கிழக்கு மாகாணத்தில் கைத்தொழில் துறைக்கான வளங்கள் தாராளமாக உள்ளன. அவற்றைக் கொண்டு குடும்ப உற்பத்தி வருமானத்தை அதிகரிக்கச் செய்வதனூடாக அநேகருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை வழங்க முடியும். தற்போது கிழக்கு மாகாண கைத்தொழில்துறை சார்ந்த கைத்தறி, தும்புசார் உற்பத்திப் பொருட்கள், மர வேலைப்பாட்டு உற்பத்திகள், களிசார் மட்பாண்ட உற்பத்திப் பொருட்களுக்கு தேசிய அளவில் சிறந்த வரவேற்புள்ளதை அறிய முடிகிறது. எமது உற்பத்திப் பொருட்களில் அரைவாசிக்கு மேற்பட்டவை சிங்கள மக்களால் கொள்வனவு செய்யப்படுகின்றன” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg