Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துருக்கியர்கள் அச்சமின்றி ஜேர்மனுக்கு பயணிக்க முடியும் – மெர்கல்

In ஐரோப்பா
Published: 06:53 GMT, Sep 11, 2017 |
0 Comments
1311
icon_com
This post was written by : Suganthini
german

துருக்கியப் பிரஜைகள் அனைவரும் எந்தவித அச்சமுமின்றி ஜேர்மனுக்கு சுமூகமான பயணத்தை மேற்கொள்ள முடியும் என ஜேர்மன் கன்சர்வேட்டிவ்; கட்சி அதிபர் அஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனி உட்பட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான பயணத்தை மேற்கொள்ளும் துருக்கியப் பிரஜைகள் மிகக் கவனமாக நடந்துகொள்ள வேண்டும் என்று தனது பிரஜைகளுக்கு, துருக்கிய அரசாங்கம் நேற்றுமுன்தினம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

துருக்கிய அரசாங்கத்தின் இந்த எச்சரிக்கை தொடர்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்துத் தெரிவித்தபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

துருக்கிய அரசாங்கத்தின் பயண எச்சரிக்கையை புறக்கணித்துள்ள ஜேர்மன் அதிபர், ஜேர்மனியிலுள்ள துருக்கியப் பிரஜைகள் அனைவரும் மிகவும் பாதுகாப்பாகவே உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், துருக்கிக்குப் பயணிக்கும் ஜேர்மனியர்களை விட, மேற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து ஜேர்மனிக்குப் பயணிக்கும் துருக்கியப் பிரஜைகள், ஜேர்மனியில் மிகவும் பாதுகாப்பாக உள்ளார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜேர்மனியில் இம்மாதம் 24ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஜேர்மனியில் கடந்த வாரம் நடைபெற்ற தொலைக்காட்சி விவாதத்தின்போது, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து துருக்கியை இணைத்துக்கொள்வதற்கான பேச்சுவார்த்தையை முடிவுக்குக் கொண்டுவரவுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg